Monday, 30 October 2017

17. பொது - சிவன்

இன்று காலை என் மனத்தில் எழுந்த கவிதை...

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்பாடு: விளம் மா காய் (அரையடி)

உலகமே ஒருநா டகமேடை
..உணர்ந்திடின் ஒருபா தகமில்லை
அலகிலா விளையாட் டுடையீசன்
..அனுதினம் அரங்கேற் றிடும்லீலை
விலகினால் விரும்பி வரும்யாவும்
..விரும்பினால் விலகிச் செலுமவையே
மலரடி பணிவார்க் கிடரில்லை
..மருளிலை மனமே தெளிவாயே

சரண்யா
28.10.2017

No comments:

Post a Comment