இறைவன் புகழ் பாடு
இறைவன் புகழ் - எளிய தமிழில், மரபு வடிவில், அடியேனின் அர்ப்பணம்.
Thursday, 16 March 2017
06. ஆலிலை அழகன்
ஆலிலை
அழகன்
அறுசீர் விருத்தம்
வாய்பாடு - காய் மா காய் (அரையடி)
ஆலிலையில் துயிலும் அழகோனே
..அறநெறியைத் தழைக்கச் செய்தோனே
நீலமயில் இறகை அணிந்தோனே
..நெஞ்சதனின் உள்வந்(து) அமர்வாயே
கோலவடி வான கோமானே
..கொஞ்சுகுழல் ஊதி மகிழ்வோனே
ஞாலமதைக் காக்கும் திருமாலே
..ஞானநிலை தன்னை அருள்வாயே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment