ராகம் - நளினகாந்தி
தாளம் - ஆதி
சந்தக் குழிப்பு:
தனதன தனதன தனதான
விரிசடை யினிலொலி நதியோடு
..மிளிரழ குடைமதி புனைவோனே
கரமதி லொளிமிகு மழுவோடு
..கலையையும் அனலையும் உடையோனே
நரையெரு தினிலம ரதிதீரா
..நளினம துரமுக உமைபாகா
திருவடி நிழலினை அருள்வாயே
..திருமயி லையிலுறை பெருமானே
பதம் பிரித்த வடிவம் :
விரிசடையினில் ஒலிநதியோடு
..மிளிரழ(கு) உடைமதி புனைவோனே
கரமதில் ஒளிமிகு மழுவோடு
..கலையையும் அனலையும் உடையோனே
நரை எருதினில் அமர் அதிதீரா
..நளின மதுரமுக உமைபாகா
திருவடி நிழலினை அருள்வாயே
திருமயிலையில் உறை பெருமானே
சரண்யா.
No comments:
Post a Comment