தன்னதன தான தனதான
மண்ணிலினி யானு முதியாதே
..மன்னுபுக ழாரு னிணைதாளைப்
பண்ணிசையி லூறி விழைவோடே
..பன்முறையு மோதி மகிழ்வேனோ
விண்ணவர்க ளூறு கடிதேக
..வெம்மைமிகு சூர னுடல்மாள
திண்ணமுடை வேலை விடும்வீரா
..சென்னிமலை மேவு பெருமாளே
பதம் பிரித்த வடிவம்:
மண்ணில் இனி யானும் உதியாதே
..மன்னுபுகழ் ஆர் உன் இணைதாளைப்
பண்ணிசையில் ஊறி விழைவோடே
..பன்முறையும் ஓதி மகிழ்வேனோ
விண்ணவர்கள் ஊறு கடி(து) ஏக
..வெம்மைமிகு சூரன் உடல் மாள
திண்ணம் உடை வேலை விடும்வீரா
..சென்னிமலை மேவு பெருமாளே
No comments:
Post a Comment