Tuesday, 20 February 2024

80. திருத்தணிகை - வண்ணப் பாடல்

தனதனன தனன தந்தத் தனதான

பவசலதி தனில ழுந்தித் தொலையாதே
பரசமய உணர்வி லொன்றிக் கிடவாதே
சிவமுறையு முனது செம்பொற் கழலோதிச்
சிறியனென திகழ்வு துஞ்சித் தெளிவேனோ

குவடிடிய அயில்வி டுஞ்சத் தியரூபா
குறமகளை இனிது கொஞ்சிக் குழைவோனே
தவமுனிவ ரமரர் சிந்தைக் கினியோனே
தணிகைமலை மருவு கந்தப் பெருமானே

பதம் பிரித்த வடிவம்:

பவ சலதி தனில் அழுந்தித் தொலையாதே
பரசமய உணர்வில்‌ ஒன்றிக் கிடவாதே
சிவம்‌ உறையும் உனது செம்பொற் கழலோதிச்
சிறியன் என(து‌) இகழ்வு துஞ்சித் தெளிவேனோ

குவ(டு) இடிய அயில் விடும் சத்திய ரூபா
குறமகளை இனிது கொஞ்சிக் குழைவோனே
தவமுனிவர் அமரர் சிந்தைக்(கு) இனியோனே
தணிகைமலை மருவு கந்தப் பெருமானே

No comments:

Post a Comment