Monday, 15 December 2025

82. சிவன் (தனி வெண்பா)

 1. தில்லை

அம்பலமே நம்பலமென் றங்கையால் ஏத்திடுவார் 
தம்பயம் போக்கும் தயாபரன் - செம்பொன்னார் 
மன்றுள் நடமாடும் மன்னன் திருவடி 
என்றும் உளதே எமக்கு

பதப்பிரிவு:

அம்பலமே நம்பலம் என்று அம் கையால் ஏத்திடுவார் 
தம் பயம் போக்கும் தயாபரன் - செம்பொன் ஆர் 
மன்றுள் நடமாடும் மன்னன் திருவடி 
என்றும் உளதே எமக்கு

2. திருமயிலை 

மந்தை வெளியில் மனமலைந்தால் என்றனக்குச் 
சிந்தை கவலை சிறிதுமிலை - எந்தை 
உறையும் எழில்மயிலை உண்டருகில் சென்று 
நிறைவாய்த் தரிசிப்போம் நின்று 

பதப்பிரிவு:

மந்தைவெளியில் மனம் அலைந்தால் என்றனக்குச் 
சிந்தை கவலை சிறிதும் இலை - எந்தை 
உறையும் எழில்மயிலை உண்டு‌ அருகில்; சென்று 
நிறைவாய்த் தரிசிப்போம் நின்று 

No comments:

Post a Comment